Jump to content

Fundraising 2012/Translation/Sengai appeal

From Meta, a Wikimedia project coordination wiki
This page is a translated version of the page Fundraising 2012/Translation/Sengai appeal and the translation is 100% complete.
  • தயவுசெய்து படிக்கவும்:
    விக்கிப்பீடியா பங்களிப்பாளர் முனைவர். செங்கைப் பொதுவனிடமிருந்து
    ஒரு தனிப்பட்ட கோரிக்கை

Appeal

விக்கிப்பீடியா பங்களிப்பாளர் முனைவர். செங்கைப் பொதுவனிடமிருந்து

நான் 1936ஆம் ஆண்டு இந்தியாவின் ஒரு சிற்றூரில் ஏழை விவசாயியாகப் பிறந்தேன். இன்று நான் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதோடு அதனைச் சார்ந்தும் இருக்கிறேன்.

நம் அனைவரின் வருங்கால தலைமுறையினருக்காக விக்கிப்பீடியா இருக்க வேண்டும் என விரும்புகிறேன். இது விக்கிப்பீடியாவை இணையத்தில் இலவசமானதாகவும் விளம்பரமற்றதாகவும் வைத்திருக்கவும் அதன் வழங்கிகளுக்காகவும் வேலை பார்க்கும் சிறிய எண்ணிக்கையிலான ஊழியர்களுக்காகவும் மேலதிகக் கட்டமைப்பு வசதிக்களுக்காகவும் வேண்டப்படும் வருடாந்திர நன்கொடைவேண்டல். இந்திய ரூபாய் $5, $20, $50 அல்லது உங்களால் முடிந்த அளவு தொகையை நன்கொடையாக அளியுங்கள்.

நீங்கள் என் வயதை அடையும்போது உங்களது அனுபவத்தையும் அறிவையும் உலகத்தோடுப் பகிர்ந்துகொள்ள விரும்புவீர்கள். எனக்கு ஐந்து மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். என் வாழ்நாளில் நான் ஓர் ஆசிரியராக இருந்திருக்கிறேன்; முனைவர் பட்டம் பெற்று ஒரு அரசு இதழில் 14 ஆண்டுகள் பதிப்பாசிரியராக வேலை பார்த்துள்ளேன். இருந்தபோதும் நான் என்னை ஒரு ஒரேர் உழவனாகவே கருதுகிறேன்.

நான் எனது முனைவர் பட்ட ஆய்வை இந்தியாவின் தமிழ்நாட்டு மாநிலத்தில் தோன்றிய விளையாட்டுகள் என்ற தலைப்பில் எழுதினேன். நீங்கள் எனது எந்த கட்டுரையையும் பார்த்திராமல் இருக்கக்கூடும். ஆனால் ஆயிரக்காணவர்கள் அவற்றைப் படிக்கிறார்கள் என்பது மனநிறைவை அளிக்கிறது. நீங்கள் எந்த தலைப்பு குறித்து படிக்க விரும்பினாலும் அதுகுறித்த கட்டுரை விக்கிப்பீடியாவில் இருக்கும் எனப் பெருமையாகக் கூறிக் கொள்கிறேன்.

நான் எனது முதல் கணினியை 2005இல் வாங்கியபோது எனது கைத்தள்ளாட்டத்தால் சுட்டியை நகர்த்துவதே எனக்குக் கடினமான ஒன்றாக இருந்தது. 2009 வாக்கில் விக்கிப்பீடியாவைக் கண்டறிந்தேன். ஒரு நாள் நான் சங்க காலப் புலவர்கள் குறித்த கட்டுரை ஒன்றைத் தொகுக்கத் தொடங்கினேன். புலவர்கள் 30 பேரின் பெயர்களைச் சேர்த்துவிட்டு நான் தூங்கச் சென்றுவிட்டேன். அடுத்தநாள் காலையில், அப்பக்கத்தில் 473 பெயர்கள் சேர்க்கப்பட்டிருப்பது கண்டேன். இந்தக் கூட்டுமுயற்சியே விக்கிப்பீடியாவை இயங்க வைக்கிறது!

அருள்கூர்ந்து எங்களது இந்த முயற்சியில் தொகுத்தல் மூலமோ நன்கொடை அளித்து விக்கிப்பீடியாவை இலவசமாக வைப்பதன் மூலமோ எங்களோடு இணைவதைப் பற்றி எண்ணிப் பார்க்கவும்.

நன்றி,

முனைவர். செங்கைப் பொதுவன்
விக்கிப்பீடியா பங்களிப்பாளர்