2012-ம் ஆண்டிற்கான நிதிதிரட்டல் / மொழிபெயர்ப்பு / பூங்கோதையுடைய வேண்டுகோள்
1 நான் பணி ஓய்வு பெற்ற போது, எனது பின்வரும் நாட்கள் தொய்வடைந்துவிடுமோ என்ற கவலையால் என் மகன் விக்கிப்பீடியாவை எனக்கு அறிமுகப்படுத்தினான். விக்கிப்பீடியாவில் யார் வேண்டுமானாலும் எழுதலாம் என்று தெளிவுபடுத்தி, எப்படி எழுதுவதென்றும் சொல்லித் தந்தான்.
அன்று தொடங்கி, விக்கிப்பீடியாவில் இருபடிச் சமன்பாடுகள், நிகழ்தகவு, கோட்டுருக்கள் என பல கணிதத் தலைப்புகள் தொடர்புடைய கட்டுரைகளை எழுதியிருக்கிறேன். இதுவரை சுமார் 7,000 தொகுப்புகள் செய்திருக்கிறேன்.
நான் எனது தாய்மொழியும், எனக்கு மிகவும் பிடித்த மொழியுமான தமிழில் பங்களிக்கிறேன்: இம்மொழி சுமார் 85 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. நான் விக்சனரிக்காக 6,000-க்கும் மேற்பட்ட தமிழ் உச்சரிப்புக் கோப்புகளைப் பதிவேற்றியுள்ளேன். தற்போது, அதிக மக்கள் இவ்வழகான மொழியின் மூலம் பகிர்ந்து கொள்ள இயலும்.
ஒரு ஆசிரியையாகவும், ஒரு தாயாகவும், நான் எப்போதும் வேலையாகவே இருந்திருக்கின்றேன். இப்போது நான் பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டேன்; என் குழந்தைகளும் வளர்ந்து விட்டனர். இப்போதெல்லாம் என் நேரம் எனக்கு மட்டுமே சொந்தம் -- ஆம், 24 மணி நேரமும் தான்! நான் என்னுடைய ஒவ்வொரு நாளையும் விக்கிபீடியாவில் கழிக்கிறேன்.
நான் ஒரு தன்னார்வலராக இப்பணியைச் செய்து வருகிறேன். இதற்காக யாரும் எனக்கு ஊதியம் தருவதில்லை. ஆனாலும் விக்கிப்பீடியாவில் எழுதுவது என்னுடைய வாழ்க்கைப் பணியாகிவிட்டது. நான் தற்போது வகுப்பறையில் இல்லை. ஆயினும் வருங்கால மாணவ சந்ததியினர் நான் விரும்பும் மொழியின் வாயிலாக கற்க உதவி வருகிறேன்.
ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த அளவு பங்களிக்கலாம். தயவு கூர்ந்து ரூ. 250, ரூ. 1000, அல்லது 2000 ரூபாய்களை நன்கொடையாக அளித்து விக்கிப்பீடியாவிற்கு உதவிடுங்கள்.
Bio
பூங்கோதை பாலசுப்ரமணியன் தமிழ் நாட்டில் உள்ள கோயம்புத்தூரில் வசித்து வருகிறார். இதே ஊரில் பல வருடங்களாக கணித ஆசிரியையாகப் பணியாற்றியுள்ளார். 2010-ம் ஆண்டு முதல் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறார். இவர் 250-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை உருவாக்கியதுடன், 6,000-க்கும் அதிகமான சொற்களுக்கு உச்சரிப்புக் கோப்புகளைப் பதிவேற்றியுள்ளார். இவருடைய விக்கிப்பீடியா பயனர் பெயர், இவருடைய விருப்பமான புதினம், டு கில் எ மாக்கிங் பேர்டில் இருந்து எடுக்கப்பட்டதாகும்