Jump to content

விக்கிமீடியாவின் விக்கிசந்திப்பு இந்தியா 2021/நட்புறவுக் கொள்கை

From Meta, a Wikimedia project coordination wiki
This page is a translated version of the page Wikimedia Wikimeet India 2021/Friendly space policy and the translation is 90% complete.

நோக்கம்

இந்த நடத்தை விதிமுறைகள் மற்றும் நட்புறவுக் கொள்கையானது விக்கிமீடியாவின் இந்திய விக்கிசந்திப்பு 2021இல் கலந்து கொள்பவர்களின் பாதுகாப்பு, பாகுபாடற்ற மற்றும் நட்பார்ந்த சூழலை உருவாக்குவதாகும்.

இவை அனைத்தும் விக்கிமீடியா தொடர்பான இணைய மற்றும் அணைவரிநிலைகளில் நடைபெறும் முக்கிய மற்றும் துணை நிகழ்வுகள், கூட்டங்கள், அஞ்சல் பட்டியல்கள், சோதனை நிகழ்வுகள் மற்றும் முறைசாரா கூட்டங்கள் ஆகிய அனைத்திற்கும் பொருந்தும். இந்த நடத்தை விதிகள் மற்றும் நட்புறவுக் கொள்கைகளை மீறினால் தற்காலிகத் தடை அல்லது தற்காலிகமாக விக்கிச் சமூக நடவடிக்கைகளில் இருந்து வெளியேற்றப்படலாம்.

இந்த நிகழ்வு எந்தவடிவிலான தொல்லைகளையும் ஏற்றுக் கொள்ளாத பூஜ்ஜிய-சகிப்புத் தன்மைக் கொள்கையினைக் கடைபிடிக்கிறது.

பன்முகத்தன்மை அறிவிப்பு

இந்த நிகழ்வின் மூலம் உரையாடல்களுக்கான திறந்த மற்றும் உள்ளடக்கிய மன்றத்தை உருவாக்குவதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், மேலும் நிகழ்வின் போது உங்களுக்கு ஏற்படக்கூடிய எந்த ஒரு சிக்கல்கள் தொடர்பாக உங்களது கருத்துக்களைக் கேட்க தயாராக உள்ளோம்.

இந்த பட்டியல் முழுமையானதாக இருக்க முடியாது என்றாலும், வயது, பாலின அடையாளம் அல்லது வெளிப்பாடு, பால் நாட்டம், சமூக பொருளாதார நிலை மற்றும் பின்னணி, கலாச்சாரம், இனம், மொழி, தேசிய / துணை தேசிய தோற்றம், அரசியல் நம்பிக்கைகள், தொழில், தொழில்நுட்பத் திறன்கள், இனம், மதம், உடல் ஆகியவற்றில் உள்ள பன்முகத்தன்மையை ஐயத்திற்கிட மற்ற வகையில் நாங்கள் மதிக்கிறோம். மாற்றுத் திறனாளிகள் உட்பட அனைத்துப் பங்கேற்பாளர்களும் மேலே கூறப்பட்டுள்ள பண்புகளைக் கடைபிடிக்க வேண்டும் என்றும் அதில் எந்த பாகுபாட்டினையும் நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம்.

அனைத்து பங்கேற்பாளர்களுக்குமான அடிப்படை விதிகள்

  • நட்பும் பரஸ்பர மரியாதையும் - ஒரு இனிமையாகவும் நட்பு பாராட்டும் வகையிலும் நேர்மையாக பங்களிக்கவும். மிரட்டுதல், இழிவுபடுத்துதல், தாக்குதல் அல்லது பாகுபாடு காட்டுதல் போன்ற செயல்கள் கண்டிப்பாக தவிர்கப்பட வேண்டும்.
  • பங்கேற்பு மற்றும் ஈடுபாடு - அனைத்து பங்கேற்பாளர்களையும் மதித்து, மற்றவர்களுக்கும், திட்டத்தின் செயல்பாடுகளுக்கும் எவ்வித இடையூறும் செய்யாமல் உங்களது கேள்விகளை எழுப்புங்கள். குழு உரையாடலின் போது மற்றொரு உறுப்பினர் பேசிக் கொண்டிருக்கும் போது பேசுவதைத் தவிர்க்கவும், அல்லது அவர்களின் கேள்விகளை வேண்டுமென்றே புறக்கணிக்காதீர்கள். அனைவரையும் விவாதத்தில் பங்கேற்க உதவுங்கள். நீங்கள் ஒரு சங்கடமான சூழலில் அல்லது உரையாடலில் இருந்தால் உங்களது அசௌகரியத்தை தெரியப்படுத்துங்கள். நிகழ்வின் போது நீங்கள் பங்கேற்பதற்கான முயற்சிகள் புறக்கணிக்கப்படுவதாகவோ அல்லது தகுதிக் குறைவு ஏற்படுவதாகவோ நீங்கள் உணர்ந்தால், நிகழ்வு நெறியாளர் அல்லது ஒருங்கிணைப்பளரைத் தொடர்பு கொள்ளுங்கள்.
  • திறந்த மனப்பான்மை - அனைத்து சமூக உறுப்பினர்களுடனும் திறந்த மனப்பான்மையுடன் செயல்படுங்கள். நிறுவன, செயல்பாட்டு அல்லது தொழில்நுட்ப காரணங்களுக்காக செய்யக்கூடிய சில கட்டுப்பாடுகளைச் செய்ய அனுமதிக்கவும். நிகழ்வின் வழிகாட்டுதல்களின்படி (விண்ணப்பம் மற்றும் / அல்லது பதிவின் அடிப்படையில்) சமர்ப்பிப்புகள் ஏற்றுக்கொள்ளப்படாத நபர்கள் நிகழ்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுவதில்லை.
  • அடையாளம் - மற்றொரு நபரைப் போல ஆள்மாறாட்டம் செய்ய வேண்டாம். எந்தவொரு தனிநபருடனும் அல்லது நிறுவனத்துடனும் உடனான உங்கள் தொடர்பை தவறாக சித்தரிக்க வேண்டாம். இதேபோல், மற்றொரு நபரின் அடையாளம் அல்லது பிற தனிப்பட்ட தகவல்களை அவர்களின் அனுமதியின்றி வெளியிட வேண்டாம்.
  • தனியுரிமை - பங்கேற்பாளர்கள்'பெயர் மறைவுநிலை'யினை சுயமாகத் தேர்வு செய்திருந்தால் அதனை மதிக்கவும். ஒலிதம் என்பதனை (ஆடியோவுடன்) மட்டுமே தேர்வு செய்திருக்கும் பங்கேற்பாளர்களையும் பங்கேற்க அனுமதிக்கவும் (வீடியோ இல்லாமல்). பங்கேற்பாளர்களால் நிகழ்வின் போது கொடுப்படுகின்ற பெயர்கள் / புனைப்பெயர்களைப் பயன்படுத்துங்கள்.நிகழ்பட (வீடியோ) மற்றும் / அல்லது ஒலிதம் (ஆடியோ) பதிவுகள் திட்டமிடப்பட்டிருந்தால், கூட்டத்தின் தொடக்கத்திற்கு முன்னர், பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் இது குறித்து (நோக்கம் உட்பட) தெரிவிக்கப்பட வேண்டும். கானொளிக் கரத்தரங்கின் போது சம்பந்தப்பட்ட அனைத்து பங்கேற்பாளர்களின் வெளிப்படையான ஒப்புதலுடன் மட்டுமே படங்கள் (ஸ்கிரீன் ஷாட்கள்) எடுக்கப்படலாம்.
  • ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தை - வன்முறையினை ஏற்படுத்தக்கூடிய அச்சுறுத்தல்கள், வன்முறையைத் தூண்டுவது, தனிப்பட்ட தாக்குதல்கள், தலைப்பிற்குத் தொடர்பற்ற பாலியல் சைகை அல்லது தலைப்பிற்குத் தொடர்பற்ற வகையில் பொதுவாகவோ அல்லது தனையாகவோ ஒருவரைத் தொடர்பு கொள்ள முயற்சிக்கும் நடவடிக்கைகள் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள முடியாதவை. தொடர்ச்சியான இடையூறு, குறுக்கீடு அல்லது சமூக ஒத்துழைப்பைத் தடுப்பதன் மூலம் (அதாவது ட்ரோலிங்) கலந்துரையாடலுக்கோ அல்லது சமூகத்துக்கோ தீங்கு விளைவிப்பது ஆகியவற்றிற்கு COCFSP ஐப் பயன்படுத்துவது. மேல் குறிபிடப்படாத ஒழுங்கு நடவடிக்கைகள் ஏதேனும் செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

ஊக்கமளித்தல்

  • அங்கீகாரம் - கானொளிக் கரத்தரங்கின்போது போது ஊக்கமளிப்பாளர் அடையாளம் காணப்படுவார் (எ.கா. ஒரு நட்சத்திர சின்னத்துடன், "ஊக்கமளிப்பாளர்" அல்லது "நிர்வாகி", தளத்தைப் பொறுத்து) ஊக்கமளிப்பாளர் , அந்த கருத்தரங்கினை வழிநடத்துபவராகவோ அல்லது துவங்கிவைப்பவராகவோ இருப்பார். தொழில்நுட்ப காரணங்களுக்காகவோ அல்லது கானொளிக் கருத்தரங்கின்போதோ ஊக்கமளிப்பாளர் மாற்றப்பட்டால் அது மற்ற பங்கேற்பாளர்களுக்கு சுட்டிக்காட்டப்படும்.
  • தொழில்நுட்ப பங்கு - கானொளிக் கரத்தரங்கின் போது, ஊக்கமளிப்பாளர் நீட்டித்த தொழில்நுட்ப உரிமைகளை கொண்டிருப்பார். பங்கேற்பாளர்களைச் சேர்ப்பது, வாக்கெடுப்புகளை வழங்குதல், பக்கேற்பாளர்களை பேச வாய்ப்பளித்தல் (மியூட்) / பேச்சை முடக்குதல் (அன்மியூட்) , பிரேக்அவுட் அறைகளை உருவாக்குதல் மற்றும் பிற அம்சங்கள் போன்ற செயல்பாடுகளைச் செய்வதற்கான திறன் ஆகியன இதில் அடங்கும்.
  • சமூகப் பங்கு - இந்த விதிகளை அவற்றின் நீட்டிக்கப்பட்ட தொழில்நுட்ப உரிமைகளை இணக்கமாகச் செயல்படுவதற்காகவும், தேவை ஏற்படின் கூடுதல் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கும் ஊக்கமளிப்பாளர் எதிர்பார்க்கிறார். பங்கேற்பாளர்களைத் தவிர்த்தல் மற்றும் கானொளிக் கரத்தரங்கினை முடிப்பது உள்ளிட்ட இந்த விதிகளைச் செயல்படுத்த ஊக்கமளிப்பாளர் எந்த நடவடிக்கையும் எடுக்கலாம். இத்தகைய முடிவுகள் அமர்வில் பங்கேற்பவர்களுக்கும் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் தெரிவிக்கப்படும். கண்ணியமான விவாதங்களுக்கு உகந்ததாகவும், பங்கேற்பாளர்களின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை மனதில் வைத்து, ஊக்கமளிப்பாளர் தங்களது உரிமைகளை நல்லெண்ண அடிப்படையில் பயன்படுத்துவார்.

செயலாக்கம்

  • தனிப்பட்ட பொறுப்பு - பங்கேற்பாளர்கள் அனைவரும் இந்த விதிகளை கடைப்பிடிக்க வேண்டும்.
  • புகாரளித்தல் - வேறு யாராவது இந்தக் கொள்கையைப் பின்பற்றவில்லை என்று நீங்கள் கருதினால், உங்களுக்கு பின்வருவனவற்றினைச் செய்ய வாய்ப்புகள் உள்ளன:
  1. விதிமுறைகளை வெளிப்படையாக சுட்டிக்காட்டவும்,
  2. ஊக்கமளிப்பாளரிடம் மட்டுமே தெரிவிக்கவும் (எடுத்துக்காட்டாக, நேரடி அரட்டை செயல்பாட்டைப் பயன்படுத்துவதன் மூலம்) மற்றும் / அல்லது
  3. அல்லது ஒருங்கிணைப்பாளர்களுக்குத் தெரிவிக்கவும்: wmwm@cis-india.org
  • விளைவுகள் - விதிமீறல்கள் ஏற்பட்டால், ஊக்கமளிப்பளர் உடனடியாக செயல்பட முடியும். விதிமீறல்களில் ஈடுபடுவோரை அந்த அமர்வு அல்லது முழு நிகழ்வில் இருந்தோ வெளியேற்றப்படலாம் அல்லது கலந்து கொள்ள தடை விதிக்கப்படலாம். குறிப்பாக கடுமையான விதி மீறல்களில் ஈடுபடுவோரை, புகார்களைத் தீர்ப்பதற்கு உதவ வேண்டி அவர் பற்றிய தகவல்களை மூன்றாம் தரப்பினருக்கு அனுப்பப்படலாம் மேலும் அவரை ஒரு துன்புறுத்துபவராக மற்ற பங்கேற்பாளர்களுக்கோ அல்லது பொது மக்களுக்கோ அடையாளம் காட்டப்படலாம்.

முறைப்பாட்டுத் தீர்மானம்

நிகழ்வினை ஒருங்கிணைக்கும் குழுவில் உள்ள ஒருவர் மீது உங்களுக்கு புகார் இருந்தால், அவர்கள் அந்தப் புகார் குறித்த சம்பவத்தை கையாளுவதில் இருந்து தங்களைத் தாங்களே விலக்கிக்கொள்வார்கள். உங்கள் புகாரை கவனத்தில் கொள்ளவும், புகார் பற்றி விவாதிக்கவும், அதில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் உரிய பாதுகாப்பினை வழங்கவும் மற்றும் மரியாதைக்குரிய வகையில் அந்த சிக்கலைத் தீர்க்க நாங்கள் விரைவாக செயல்படுவோம். துன்புறுத்தல் உட்பட ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தை பற்றிய நடவடிகைகளுக்கு முடிந்தவரை உடனடியாக விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்வோம். பாதிக்கப்பட்டவர்களின் உறுதியான ஒப்புதல் இல்லாமல் நாங்கள் அவரகளது பெயர்களை வெளியிட மாட்டோம். தவறான கண்ணோட்டத்தில் தன்னார்வலர்கள் மீது வைக்கப்படும் எந்த ஒரு குற்றச்சாட்டுகளையும் நிராகரிக்கவோ உரிமை உள்ளது.

இந்த நிகழ்வானது சிறப்புரிமை வகுப்பினரின் சௌகரியங்களை விட விளிம்புநிலை வகுப்பினரின் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் தருகிறது என்பதனை கவனத்தில்கொள்ள வேண்டும்.பின்வரும் புகார்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் உரிமை ஒருங்கிணைப்பாளர்களுக்கு உண்டு.

  • 'Reverse' -isms, including 'reverse racism,' 'reverse sexism,' and 'cisphobia'
  • “என்னைக் கொஞ்சம் தனியாக இருக்க விடுங்கள்,” “என்னை விட்டுச் செல்லுங்கள்” அல்லது “நான் உங்களுடன் இதைப் பற்றி விவாதிக்கவில்லை” போன்ற வாக்கியங்களுக்கு எதிரான புகார்கள்.
  • அவர்கள் பேசும் 'தொனியில்' உங்களுக்கு உடன்பாடு ஏற்படாத போது
  • இனவாத, பாலியல் ரீதியிலான, திருநங்கைகளுக்கு எதிரான அடக்குமுறைகள் போன்றவற்றை விமர்சித்தல்.

இவற்றையும் காண்க