விக்கி பெண்கள் முகாம் 2023/நிதியுதவி
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
WikiWomenCamp மூன்றாவது நிகழ்வு அக்டோபர் 20 முதல் 22 வரை புது தில்லி, இந்தியாவில் நடைபெறும். வளர்ச்சி, தலைமைத்துவம் மற்றும் தொடர்பில் கவனம் செலுத்தும் மாற்றத்திற்கான அனுபவத்தினை பெற மாநாட்டில் கலந்துகொள்ளுங்கள். இந்த ஆண்டின் கருதுபொருள்: "பெண்களின் அதிகார எழுச்சி மற்றும் சமூக தடைகளை தகர்த்தெரிதல்".
உதவித்தொகை என்றால் என்ன?
உதவித்தொகை என்பது இந்த முகாமில் நீங்கள் கலந்து கொள்ள ஏற்படும் செலவுகளை ஈடுகட்ட உங்களுக்கு வழங்கப்படும் நிதி உதவியாகும். விக்கி பெண்கள் முகாம் உதவித்தொகையின் நோக்கம், பெண்கள் விக்கி நடவடிக்கைகளில் பங்கேற்க சம வாய்ப்புகளை உருவாக்குவதும், மாநாட்டில் பெறக்கூடிய தனித்துவமான அனுபவங்கள், கற்றல் மற்றும் தனிப்பட்ட மேம்பாட்டு வாய்ப்புகளிலிருந்து பயனடைவதும் ஆகும்.
பிரிவுகள்
நிகழ்ச்சியின் பயன் திறம்பட செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்யவும், நிகழ்ச்சித் தாக்கத்தை அதிகப்படுத்தும் நோக்கத்துடன், மகளிர் முகாமின் திட்டம் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது- உத்தி மற்றும் திறன் மேம்பாடு.
முகாமின் இரண்டு கருப்பொருள்கள், உத்தி மற்றும் திறன் மேம்பாடு மூலம் விரிவான அணுகுமுறையை கவனத்துடன் அனுமதிக்கும். திட்டமிடல் மற்றும் பங்குபெறுபவரின் ஈடுபாடு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கும், வேளையில் திறன் மேம்பாட்டு, வளங்கள் மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தப்படும்.
நிதியுதவி இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன, ஒரே அணுகுமுறையைப் பின்பற்றி, 25 இடங்கள் உத்திக்காகவும் 35 இடங்கள் திறன் மேம்பாட்டிற்காகவும்' ஒதுக்கப்பட்டுள்ளன.
ஒட்டுமொத்தமாக, 45 இடங்கள் பன்னாட்டு பங்கேற்பாளர்களுக்காவும், 15 இடங்கள் மண்டல பங்கேற்பாளர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன
உதவித்தொகை பெறுநரிடமிருந்து எதிர்பார்ப்பு
- ஆகத்து & செப்டம்பர் மாதங்களில் முகாமிற்கு முன் நடைபெறும் அமர்வுகளில் கலந்து கொள்ளுதல்
- முகாம் நண்பருடன் தினசரி விவாதங்களில் பங்கேற்றல்
- ஆய்வில் (முகாமிற்குப் பின்) ஈடுபடுதல்
- அவ்வப்போது நடைபெறும் முகாம் தொடர்பான கூட்டங்களில் பங்கேற்றல் (வியூகக் கூட்டமைப்பு)
- பெற்ற திறன்களை செயல்படுத்துதல் (திறன் மேம்பாட்டுக் குழு)
நிதியுதவி மூலம் பெறப்படுவது
- முழுப்பயணச் செலவு
- முகாம் நடைபெறும் நாட்களில் தங்குமிடம் மற்றும் உணவு
- நுழைவாணைக் கட்டணம்
முக்கிய நாட்கள்
விக்கி பெண்கள் முகாம் 2023 உதவித்தொகை திட்டத்திற்கான எதிர்பார்க்கப்படும் காலவரிசை பின்வருமாறு:
- உதவித்தொகை படிவம் வெளியீட்டு தேதி: 13 சூன் 2023
- உதவித்தொகை படிவத்தின் இறுதி தேதி: 4 சூலை 2023
- முடிவுகளின் அறிவிப்பு: சூலை 2023 நடுப்பகுதியில்
விண்ணப்பம்
விண்ணப்பிக்க இந்த படிவத்தினை நிரப்பவும் this form.
Applications have closed.