Jump to content

Fundraising 2011/Alan Letter/ta

From Meta, a Wikimedia project coordination wiki
Translation instructions
  • For pages marked "Missing" or "In progress", click the page title and start translating. When you are done, click "edit status" and change the status to proofreading.
  • For pages marked "Needs updating", compare the page to the source page and update the translation accordingly. When you are done, click "edit status" and change the status to proofreading.
  • It is important to have someone else proofread the translated page! If you have proofread a page and it is ready for publication, click "edit status" and change that page's status to ready.
  • If you are changing something that has already been published, change its status back to ready for it to be published again.

If you have any questions or feedback regarding the translation process, please post them here. Translation FAQ

விக்கிப்பீடியாவில் நான் 2,463 கட்டுரைகளை உருவாக்கி இருக்கிறேன். அத்தனையும் இலவசமாக செய்திருக்கிறேன்.

நானொரு அமைப்பு ஆலோசகன். மிகப்பெரிய நிதிசார் கணினி அமைப்புகளுடன் பணி புரிபவன். விக்கிப்பீடியாவில் நான் செலவிட்டுள்ள நேரத்தைப் பண அடிப்படையில் கணக்கிட்டால் எனக்கு பல இலட்சக்கணக்கான டாலர்கள் இழப்பு. ஆனால் எனக்கு பணம் மட்டுமே தூண்டுதல் அல்ல. விக்கிப்பீடியாவில் கிடைக்கும் தகவல்கள், நானும் ஆயிரக்கணக்கான பிற பயனர்களும் மகிழ்ச்சியுடன் இலவசமாக உருவாக்கியவை. இவை இலவசமாக உலகுக்குக் கிடைப்பதால் உலகம் இதற்கு முன்னர் இருந்ததை விட ஒரு நல்ல இடமாக மாறியுள்ளது என்று நாங்கள் நம்புகிறோம்.

தகவல்களை இலவசமாக வழங்கினாலும், அவற்றுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளுக்கு பணம் வேண்டுமே. அதனால் தான் ஒரு வருடத்துக்கு ஒரு முறை உங்களிடமிருந்து நன்கொடை வேண்டுகிறோம். விக்கிப்பீடியாவில் எவ்வித விளம்பரங்களும் இடம் பெறுவதில்லை - பளபளப்பான விளம்பரங்கள், வலைப்பக்கத்தில் பக்கவாட்டில் தெரிபவை என எவையும் இடம் பெறுவதில்லை. நாங்கள் உங்களிடம் எதையும் விற்க முயற்சிப்பதில்லை. விக்கிப்பீடியா வர்த்தக நோக்கிலிருந்து விலகி நிற்கிறது.

எங்களுக்கு நீங்கள் ₹100, ₹200, ₹300 அல்லது உங்களால் எவ்வளவு இயலுமோ அவ்வளவு நன்கொடையாக அளிப்பதன் மூலம் இத்தகவல்கள் உங்களை வந்தடைய உதவி செய்யலாம். விக்கித்திட்டங்களைத் தாங்கும் கட்டமைப்பை இலாபநோக்கற்ற விக்கிமீடியா அறக்கட்டளை நிருவகிக்கின்றது. உலகிலேயே அதிக பார்வையாளர்கள் வருகை தரும் இணையத்தளங்கள் பட்டியலில் ஐந்தாவதாக இருக்கும் விக்கிப்பீடியா 370 வழங்கிகளும் 100 க்கும் குறைவான பணியாளர்ளும் மட்டுமே கொண்டுள்ளது. பிற முதல்-5 இணையத்தளங்களுடன் ஒப்பிடுகையில் இது பெரும் வியப்பிற்குரிய செய்தியாகும்:

  • கூகுள்: 1,000,000 வழங்கிகள், 24,000 பணியாளர்கள்.
  • ஃபேஸ்புக்: 60,000 வழங்கிகள், 2,000 பணியாளர்கள்.
  • மைக்ரோசாஃப்ட்: 220,000 வழங்கிகள், 90,000 பணியாளர்கள்.
  • யாஹூ: 50,000 வழங்கிகள், 13,900 பணியாளர்கள்.

விக்கிமீடியா அறக்கட்டளைக்கு நீங்கள் அளிக்கும் ஒரு சிறிய நன்கொடை கூட மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

நமது பொருளாதாரச் சூழலில் மக்கள் பணத்துக்காக மட்டுமே வேலை செய்வார்கள் என்று நாம் எதிர்பார்க்கலாம். பணமில்லையெனில் யாரும் வேலைக்கே வரமாட்டார்கள் என்றும் நினைக்கலாம். ஆனால் விக்கிப்பீடியாவில் பிறருடன் ஒத்துழைத்து அறிவுக்கு செறிவூட்டவேண்டுமென்ற மக்களின் ஆசையைப் பயன்படுத்தி இப்படியொரு அருமையான அறிவு வளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கு சார்பற்ற, துல்லியமான மேற்கோள்களுடன் இற்றைப்படுத்தப்பட்ட தகவல்கள், அருமையான ஒழுங்கான முறையில் ஒருங்கமைக்கப்பட்டு உங்களுக்குக் கிடைக்கின்றன.

நீங்கள் அளிக்கும் நன்கொடை இப்படிப்பட்ட அருமையான திட்டத்துக்குத் துணையாக இருக்கும்.

நன்றி,

அலன் சோன்
விக்கிப்பீடியா பயனர்