VisualEditor/Newsletter/2020/July/ta
Appearance
தொகுப்புச் செய்திகள் 2020 #3
இதைப் பிற மொழியில் படிக்கவும் • இந்தப் பன்மொழிச் செய்திமடலுக்கானச் சந்தா பட்டியல்
ஏழு வருடங்களுக்கு முன்பு இதே மாதத்தில் இந்த தொகுப்புக் குழுகாட்சித் தொகுப்பான், விக்கிப்பீடியா தொகுப்பாளர்களுக்கு வழங்கப்பட்டது. அன்று முதல், தொகுப்பாளர்கள் பல்வேறு மைல்கற்களை அடைந்துச் சாதித்துள்ளனர்.
- 50 மில்லியனுக்கும் அதிகமானத் தொகுப்புகள், காட்சித் தொகுப்பானைக் கொண்டுத் தொகுக்கப்பட்டுள்ளன.
- 20 இலட்சத்திற்கும் அதிகமான படைப்புகள் இந்தக் காட்சித் தொகுப்பானில் உருவாக்கப்பட்டுள்ளன. 2019 இல் மட்டும் 6 இலட்சத்திற்கும் அதிகமான படைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
- இந்தக் காட்சித் தொகுப்பான் மிகத்தீவிரமாகப் பிரபலமடைந்து வருகிறது. தொகுப்புகளை உருவாக்குவதில், இந்தக் காட்சித் தொகுப்பானின் பங்கு இதன் அறிமுகத் தினத்திலிருந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.
- 2019 இல் 35 சதவிகிதத் தொகுப்புகளைப் புதிய பயனாளர்கள் (உள்நுழையப்பட்டத் தொகுப்பாளர்கள் ≤99 தொகுப்புகள்) இந்தக் காட்சித் தொகுப்பானைக் கொண்டுத் தொகுத்துள்ளனர். இந்தச் சதவிகித அளவு ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
- 50 இலட்சம் அளவிலானத் தொகுப்புகள் கைப்பேசிப்பக்கத்தில் இந்தக் காட்சித் தொகுப்பானைக் கொண்டுத் தொகுக்கப்பட்டுள்ளன. மிக அதிகளவிலானத் தொகுப்புகள் 2018 ஆம் ஆண்டின் கைபேசிக் காட்சித் தொகுப்பானின் திருத்தியப்பதிப்புக்குப் பிறகு இடம்பெற்றுள்ளன.
- 17 நவம்பர் 2019 இல், கைபேசிக் காட்சித் தொகுப்பானில் வானவெளியிலிருந்து முதல் தொகுப்புத் தொகுக்கப்பட்டது 🚀 👩🚀
- தொகுப்பாளர்கள் 70 இலட்சத்திற்கும் அதிகமானத் தொகுப்புகளை wikitext தொகுப்பான் மூலம் தொகுத்துள்ளனர். இதில் 600,000 புதியத் தொகுப்புகளும் அடக்கம். 2017 wikitext தொகுப்பான் என்பது காட்சித் தொகுப்பானின் உள்ளமைக்கப்பட்ட wikitext பயன்முறை. இதனை விருப்பத்தேர்வுகளிலிருந்து இயக்கிக் கொள்ள முடியும்.