Jump to content

Talk:KaniTamil24

Add topic
From Meta, a Wikimedia project coordination wiki
Latest comment: 4 months ago by Neechalkaran in topic இற்றை

தற்போதைய நிலை[edit]

மாநாட்டு மலர்க்கு விக்கித் திட்டங்கள் குறித்து மயூரநாதன் மற்றும் பாலாஜி ஆகியோர் கட்டுரை எழுதுகிறார்கள். ஆய்வுக் கட்டுரைக்கான சுருக்கம் அனுப்பும் கடைசி நாள் நேற்றோடு நிறைவடைந்துள்ளது. விக்கித் திட்டங்களை முன்வைத்து யாரும் ஆய்வுக் கட்டுரை எழுதியதாகத் தெரியவில்லை.

வேறு என்னென்ன வகையில் இந்த மாநாட்டில் விக்கிப்மீடியர்களாகப் பங்கெடுக்க முடியும் அவ்வாறு பங்கெடுக்க தேவைப்படும் உதவிகள் குறித்தும் சொல்லலாம்.-Neechalkaran (talk) 06:04, 23 November 2023 (UTC)Reply

எனது கருத்துகள்[edit]

  1. தமிழ் விக்கிப்பீடியாவிலிருந்து செய்யப்பட வேண்டிய ஏற்பாடுகளின் பொறுப்புகளை நமக்குள் பகிர்ந்து, என்னால் இயன்றளவு பங்கெடுக்க இயலும்.
  2. பிப்ரவரி 10 அன்று சனிக்கிழமை என்பதால், முழு நாளும் நிகழ்வுகளில் கலந்துகொள்ள இயலும்.
  3. பிப்ரவரி 8 அல்லது 9 தேதிகளில் ஏதேனும் ஒரு நாள் அலுவலகப் பணிகளிலிருந்து விடுப்பு எடுத்துக்கொள்ள இயலும். நமது தேவைக்கேற்ப முடிவு செய்துகொள்வேன்.
  4. காட்சி அரங்கம், பயிலரங்கு/ தொடர்தொகுப்பு இவற்றிற்கான செயல்பாடுகளில் என்னை ஈடுபடுத்திக்கொள்ள இயலும்.
  5. போக்குவரத்து, தங்குமிடம் இவற்றிற்கு நான் செலவு செய்யவேண்டியது இல்லை. வெளியூரிலிருந்து வரும் தன்னார்வலர்களின் செலவுகளுக்கான நிதி குறித்து நாம் முடிவு செய்யவேண்டும்.
  6. மாநாட்டில் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எவ்வாறு இருக்கும் என்பது குறித்தும் தகவல்களைப் பெற வேண்டும். - M. Selvasivagurunathan (talk) 07:59, 23 November 2023 (UTC)Reply

காட்சி அரங்கம் அமைப்பதற்குத் தேவைப்படும் நிதியைப் பெறுவது குறித்து முடிவு செய்யவேண்டும். - M. Selvasivagurunathan (talk) 18:01, 23 November 2023 (UTC)Reply

அடிப்படை வசதிகள் குறித்து தற்போதைக்கு யாரும் திட்டமிடவில்லை. அதைத் திட்டத்திற்கேற்ப ஜனவரி கடைசியில் முடிவு செய்யலாமென நினைக்கிறேன். இது அரசு மாநாடு என்பதால் போதியவரை அரசு உதவி செய்ய வாய்ப்புள்ளது. ஒரு பகுதி ஏற்பாட்டுச் செலவுகள் குறையலாம். தற்போது வரை நாம் தான் விக்கித்திட்டங்கள் குறித்து நிகழ்வுகளைப் பரிந்துரைத்து, மாநாட்டில் பரப்புரை செய்யவுள்ளோம். த.இ.க.வின் உதவிகள் குறித்து உறுதியாகத் தெரியவில்லை. அடுத்தடுத்த கூட்டங்களில் தெளிவு கிடைத்தால் தகவலைப் பகிர்கிறேன். தற்போதைக்கு அரசு அல்லது சிஐஎஸ் உதவி செய்யும் என எண்ணித் திட்டமிடலாம். முந்தைய மாநாட்டில் நடந்தது போல நேரடிப் பங்களிப்புகளைச்(கட்டுரைப் போட்டி/ஒளிப்படம்/மெய்ப்புத்திருத்தம்) செய்ய அதிகப் பயனர்கள் ஒருங்கிணைக்க உதவ வேண்டும். இப்போதைக்குக் காட்சி அரங்கிற்கான ஆவணங்கள், பதாகைகள், பயிலரங்கிற்கான கையேடு போன்றவற்றை வடிவமைக்கலாம். -Neechalkaran (talk) 18:41, 23 November 2023 (UTC)Reply

//முந்தைய மாநாட்டில் நடந்தது போல நேரடிப் பங்களிப்புகளைச்(கட்டுரைப் போட்டி/ஒளிப்படம்/மெய்ப்புத்திருத்தம்) செய்ய அதிகப் பயனர்கள் ஒருங்கிணைக்க உதவ வேண்டும்// இது குறித்து கூடுதலாக விளக்க இயலுமா? முந்தைய மாநாட்டில் நாம் செய்தவை குறித்து அறிந்துகொள்ள விரும்புகிறேன். (ஏனெனில், இதற்கு முன்னர் என்னை ஈடுபடுத்திக்கொண்டது இல்லை) ஏதேனும் திட்டப்பக்கங்கள் இருந்தால், இணைப்பினைத் தாருங்கள். படித்துப் பார்க்கிறேன். - M. Selvasivagurunathan (talk) 14:04, 24 November 2023 (UTC)Reply

ta:விக்கிப்பீடியா:சூலை_2010_செம்மொழி_மாநாட்டில்_தமிழ்_விக்கிப்பீடியா இதைப் பார்க்கலாம். -Neechalkaran (talk) 17:58, 25 November 2023 (UTC)Reply

இணைப்பினைப் பகிர்ந்தமைக்கு நன்றி. நீங்கள் தெரிவித்ததுபோன்று, கட்டுரைப் போட்டி நடத்துவது என்பது பெரிய பணி; ஒரு குழு அமையவேண்டும். இந்தத் தகவலை விக்கிப்பீடியாவில் அறிவித்து, பயனர்கள் எவரேனும் முன்வருகிறார்களா எனப் பார்க்கலாமா? - M. Selvasivagurunathan (talk) 11:49, 29 November 2023 (UTC)Reply

பன்னாட்டு மாநாடு[edit]

தஞ்சைப் பல்கலைக் கழகத்தார் நடத்தவுள்ள பன்னாட்டு நிகழ்வும் இதே மாதத்தில் வருகிறதா? பன்னாட்டுக் கணினித் தமிழ் மாநாடு சென்னையில் நடைபெறுமா? Info-farmer (talk) 14:03, 23 November 2023 (UTC)Reply

அவர்கள் அறிவித்தார்கள்; நம்மை அணுகுவார்களா என்பது தெரியவில்லை. தமிழ் விக்கிப்பீடியர்கள் எவரேனும் அவர்களை அணுகுவார்களா என்பதுவும் தெரியவில்லை.
இந்தத் திட்டப்பக்கம், சென்னையில் நடைபெறவிருக்கும் 'கணித்தமிழ் மாநாடு 2024' குறித்தானது ஆகும். - M. Selvasivagurunathan (talk) 17:42, 23 November 2023 (UTC)Reply
ஆமாம். பிப்ரவரி 28 என மேடையில் கூறினார்கள். அதற்கான அறிவிப்புகள் வந்ததாகத் தெரியவில்லை. @சத்திரத்தான் அவர்களின் தொடர்பில் இருக்கிறார் என நினைக்கிறேன். ஏதேனும் அறிவிப்பு வந்து நம்மை அணுகினால் தனியாகத் திட்டமிடலாம். -Neechalkaran (talk) 18:16, 23 November 2023 (UTC)Reply
தஞ்சை மாநாட்டிற்கான வாய்ப்புகள் குறைவு. நிதியுதவி விக்கிப்பீடியாவிலிருந்து வழங்கினால் நடைபெறும். குறைத்தபட்சம் அன்றைய தினம் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றுக்கு முயற்சி செய்யலாம். தற்பொழுது சென்னை நிகழ்வில் பங்களிக்கலாம். --சத்திரத்தான் (talk) 01:14, 24 November 2023 (UTC)Reply
@Info-farmer: பயனர்களின் பயணம்/தங்குமிடம் குறித்து இனிதான் திட்டமிட வேண்டும். நீங்கள் ஒருங்கிணைப்பில் இணைவிரும்புகிறீர்களா?-Neechalkaran (talk) 10:25, 11 January 2024 (UTC)Reply

எனது பரிந்துரைகள்[edit]

விக்கித்திட்டங்களைப் பற்றி தொழினுட்ப பின்னணி கொண்ட மாணவர்களிடமும், தமிழார்வமுடையோரிடமும் பரவலாக, விரிவாக பரிந்துரைப்பதும், பரப்புரை செய்வதும் அதன் மூலம் அவர்களில் ஆர்வமுடையோரை கண்டறிவதும் அதன்வழி தமிழ் விக்கியின் அனைத்து திட்ட செயற்பாடுகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதையும் நமது திட்ட குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டால் சிறப்பாக அமையும் என எண்ணுகிறேன். அதன்படி கீழ்க்கண்டவைகளை பரிந்துரைக்கிறேன்.

  • தமிழ் பயனர்களில் பெரும்பாலோனோர் பேராசிரியர்கள், முனைவர்கள் மற்றும் ஆசிரியர்களே. அவர்களை உள்ளடக்கிய ஒரு குழுவின் மூலம் தமிழ் விக்கித் திட்டங்களைப் பற்றியும் அதன் தொழில்நுட்ப பயன்பாடுகளையும் பற்றிய சில உரைகளோ குழு விவாதங்களையோ நடத்த முயற்சிக்கலாம்.
  • ஆய்வுக்கட்டுரைகளுக்கான சுருக்கத்தை சமர்ப்பிக்க நாள் முடிவடைந்த நிலையில், அதற்காக செய்ய எதுவுமில்லையே.
  • தமிழ் விக்கியின் தொழினுட்ப பங்களிப்பாளர்கள் முன்னெடுப்போடு போட்டிகளில் கலந்து கொள்வதோடு, தமிழ் விக்கியில் பயன்படுத்தப்படும் தொழினுட்பங்கள், கருவிகள், அதன் முக்கியத்துவங்களை அறிமுகம் செய்யலாம்.
  • இந்த நிகழ்வுகளின்போது அமைக்கப்படும் கண்காட்சியில் தமிழ் விக்கிக்கு ஒரு அரங்கினைப் பெற்று அதன் வழியே, விக்கித்திட்டங்களைப் பற்றிய காணொளி, வெளியீடு, அறிமுகங்கள், முக்கியத்துவத்தை பரப்புரை செய்யலாம்.
  • மாநாட்டு மலருக்கான விக்கித்திட்டங்களை ஏற்கனவே பயனர்கள் எழுத முன்னெடுத்துள்ளார்கள். அதில் எவ்வாறு உதவலாம் என்று கூறினால், அதற்கேற்ப பிற பயனர்கள் பங்களிக்கலாம்.
  • இந்த நிகழ்வுகளில் விக்கியின் சார்பாக நடத்தும் உரைகளோ, விவாதங்களோ, போட்டிகளோ அதில் ஆர்வமாக விருப்பம் கொண்டு கலந்து கொள்வோரையும், நிரலாக்க போட்டியின் பங்களிப்பாளர்களில் விக்கித்திட்டங்களில் விருப்பமுடையோரையும் கொண்டு, அவர்களுக்காக மட்டுமே ஒரு தனி பயிற்சி ஏற்பாடு செய்து அதன் மூலம் அவர்களை புதுப்பயனர்களாக்க மாற்றி பங்களிக்கச் செய்யலாம்.

இதில், நிரலாக்க போட்டி தவிர மற்ற செயல்பாடுகளுக்கு என்னாலான எல்லா உதவிகளையும் அளிக்க தயாராக உள்ளேன்.--பிரயாணி (talk) 13:45, 29 November 2023 (UTC)Reply

காட்சி அரங்குத் திட்டமிடல்[edit]

நிரலாக்கப்போட்டிகளில் விக்கித் திட்டங்கள் தொடர்பாக யாரும் தீர்வுகளை முன்வைக்கவில்லை. பொதுச் சமூகத்தினரும் விக்கிநுட்பங்களைப் புரிந்து கொள்வது கடினம். ஆய்வுக்கட்டுரைகளும் ஆண்டு மலரிலும் விக்கித்திட்டங்கள் குறித்து கட்டுரைகள் வருகின்றன. காட்சி அரங்கில் ஒன்றை விக்கித் திட்டங்களுக்கு ஒதுக்கீடு பெற்றுள்ளேன். மற்ற பயிற்சிகள் குறித்து இன்னும் உறுதி செய்யவில்லை. தற்போதைக்குக் காட்சி அரங்கம் உறுதியானதால் அதை எப்படிப் பயன்படுத்தலாம் என்று இங்கே உரையாடுவோம். இரண்டு நாள் நிகழ்வு. கலந்து கொள்ளும் பயனர்களுக்கான உபசரிப்புகள் குறித்து தற்போதைக்கு இறுதி செய்ய முடியவில்லை. அரசு அல்லது சிஐஎஸ் இரண்டையும் கவனத்தில் கொண்டு நிகழ்வின் நெருக்கத்தில் இறுதி செய்யலாம். எனவே எத்தனைப் பயனர்கள் பொறுப்புகளை எடுத்துக் கொள்ள விரும்புகிறீர்கள் என உறுதி செய்ய வேண்டுகிறேன். இதுவரை @பிரயாணி and M. Selvasivagurunathan: விருப்பம் தெரிவித்துள்ளனர். விக்கியிலுள்ளவற்றைக் காட்சிப் படுத்துவதும், புதிய பங்களிப்பாளர்களை ஈர்ப்பதும் மட்டும் நோக்கமாகக் கொள்ளாமல் தொலைநோக்குப் பார்வையில் திட்டங்களை வகுக்கலாம் என நினைக்கிறேன். சில பரிந்துரைகள்:

  1. பதாகை வடிவமைப்பு, துண்டறிக்கை வடிவமைப்பு, விழிப்புணர்வுக் காணொளிகள் போன்றவற்றை உருவாக்க வேண்டும்.
  2. விக்கிப்பீடியா, விக்கிமூலம், விக்சனரி, மற்றும் இதர திட்டங்கள் குறித்தும் மக்கள் அறிந்து கொள்ளும்வகையில் ஏதேனும் செய்ய வேண்டும்.
  3. தமிழ் விக்கித் திட்டங்கள் கடந்து வந்த பாதையைக் காட்சிப்படுத்தல், கணினித் தமிழுக்கு விக்கித்திட்டங்களின் பங்களிப்பை உணரவைத்தல் போன்று இருக்க வேண்டும்.
  4. மாணவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், ஊடகத்தினர் என்று எப்படி இந்த வளங்களைப் பயன்படுத்தலாம் என்று துறைவாரியாக எடுத்துரைக்க வேண்டும்.
  5. அரங்கில் இரண்டு நாளுக்கு சுழற்சி முறையில் குறைந்தது இரண்டு நபர்களாவது இருக்கும் வகையில் திட்டமிடல் வேண்டும்.
  6. பார்வையாளர்களும் பங்கெடுக்கும் வகையில் ஏதேனும் செயல்முறையை உருவாக்கலாம். உதாரணமாக அவர்கள் கைப்பேசியில் உள்ள படத்தை பொதுவகத்தில் ஏற்றல், கட்டுரையில் சிறிய பங்களிப்பு செய்தல், நமது பேஸ்புக் பக்கங்கள், மின்னஞ்சல் குழுக்களில் இணையச் செய்தல் போன்று திட்டமிட்டு, நிகழ்வின் இறுதியில் ஒருசிலருக்குப் பரிசுகளையும் வழங்கலாம்.. -Neechalkaran (talk) 10:21, 7 January 2024 (UTC)Reply
பொறுப்புகளை எடுத்துக்கொள்ளும் எனது விருப்பத்தை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். இரண்டு, மூன்று நாட்களில் எனது எண்ணங்கள், பரிந்துரைகளை இங்கு வைக்கிறேன். - M. Selvasivagurunathan (talk) 13:30, 7 January 2024 (UTC)Reply
காட்சி அரங்கத்தின் வடிவமைப்பு, வசதிகள் பற்றிய தகவல்கள் கிடைத்தால் நல்லது. மொத்தம் 3 நாட்கள் அல்லவா? அரங்கம் 2 நாட்கள் எனில் எந்தெந்த நாட்கள்? திட்டமிட ஏதுவாக இருக்கும்.
  • விழிப்புணர்வு காணொளிகளில் கடந்த ஆண்டு புதிதாக இணைந்த பயனர்களை ஈடுபடுத்தி காணொளி எடுத்தால் புதிய பயனர்களை(தமிழ் ஆசிரியர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்தவர்கள்) ஈர்க்க ஏதுவாக இருக்கும் அல்லவா?
  • விக்கிப்பீடியா, விக்கிமூலம், விக்சனரி மற்றும் இதர திட்டங்கள் நமது தமிழ் மொழியிலும் பிற மொழிகளிலும் (இந்திய மற்றும் உலகளாவிய) பற்றிய ஓப்பிடு கட்டுரைகள் அளவிலும் பயனர் அளவிலும் இருந்தால் மக்கள் உத்வேகம் கொள்ள பயனளிக்கும்.
  • விக்கிப்பீடியாவிற்கு நமது அரசாங்கத்தின் பங்களிப்பு, அரசாங்கத்துக்கு விக்கிப்பீடியாவின் பங்களிப்பு, விக்கியின் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து தற்போதைய குறிப்பிடத்தக்க மைல்கற்கள் குறித்த காட்சிகளோ, புகைப்பட, ஒளிப்பட தொகுப்புகளோ பயன்படுத்தலாம்.
  • விக்கிமேனியாவில் தமிழ் சமுதாயத்தினர் பங்களித்தது, நமது திட்டங்களை பற்றிய அறிமுகங்கள் பற்றியவைகளை காட்சிப்படுத்தினால் அதிக மாணவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் மற்றும் ஊடகத்தினரின் கவனத்தை கவரவும், உத்வேகம் கொள்ளவும் விக்கியின் வளங்களை அரசாங்க துறைகளின் மூலம் வளப்படுத்துவதையும் எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதையும் அறியக்கூறலாம்.
  • வரும் பார்வையாளர்கள் பிறந்த ஊரோ, படித்த பள்ளியோ, கல்லூரியோ, பணிபுரியும் துறையோ, விருப்பத்திற்குரிய தலைப்பிலோ, கட்டுரைகள், புகைப்படங்கள், தகவல்கள் இல்லாத அல்லது தேவைப்படும் கட்டுரைகளை அந்தந்த இடத்திலே கேட்டு, அவர்களையே அதில் பங்களிக்க செய்தால், ஆர்வமுடன் பொதுமக்கள் பங்களிக்க வருவார்கள். இந்த 2 நாட்களில் இந்த நிகழ்ச்சியின் மூலம் அதிக ஆர்வமுடன் விக்கி திட்டங்களில் (எந்த திட்டமாயிருந்தாலும்) பங்கெடுக்கும் பயனர்களை ஊக்குவிக்க நினைவுப் பரிசுகள் அளிக்கலாம்.
  • முக்கியமாக மொபைல் வாயிலாக பங்களிப்பதை பற்றி எடுத்துக்கூறினால் மிகுந்த பயனளிக்கும் என எண்ணுகிறேன்.
  • நான் சென்னையிலே இருப்பதால், மற்ற பயனர்கள் பங்களிக்காத எந்த நேரத்திலும் என்னால் வந்து பங்களிக்க முடியும். தங்கும் வசதி தேவைப்படாது. ஆனால் எந்த நேரம் என்பதே முன்னதாகவே சொன்னால், அதற்கேற்றாற்போல அலுவலக வேலைகளில் விடுப்பு எடுக்க எளிதாக இருக்கும்

--பிரயாணி (talk) 12:18, 9 January 2024 (UTC)Reply

தாமதமான கருத்திற்கு எனது வருத்தங்கள்.
  • விக்கிபீடியா என்பது அனைவரும் தொகுக்கக்கூடிய ஒன்றுதான் என்பதனை சுற்றறிக்கைகள் மூலமாக அங்கு வருபவர்களுக்கு அறிய செய்யலாம் (அதிக தகவல்கள் இடம்பெறாதவாறு.) நாம் உருவாக்கியுள்ள நிகழ் படங்களின் QR இணைப்பினை அதில் தரலாம்.
  • திறன்பேசியில் உள்ள விக்கிபீடியா செயலியின் மூலமாக ஒரு கட்டுரைக்கு Description எவ்வாறு எழுதுவது படிமத்திற்கு எவ்வாறு tags சேர்ப்பது போன்றவற்றை செய்து காண்பிக்கலாம்.
  • விக்கிப்பீடியாவில் அவர்களுக்கு தேவையான கட்டுரைகள் என்ன என்பதை அவர்களிடம் கேட்டு புதிய பட்டியல் உருவாக்கி நாம் புதிதாக உருவாக்கலாம். (அங்கு வருபவர்களிடம் அந்தக் கட்டுரையினை எப்படி தேடுவது என்பதை கூறலாம், இல்லாத பட்சத்தில் நாம் பட்டியலிடலாம்.) இயன்றால் நாம் உருவாக்கிய பக்கத்தில் அவர்களையே பட்டியலிட சொல்லலாம்.
  • விக்கிப்பீடியா தொடர்பான survey ஒன்று எடுக்கலாம். எதிர்காலத் தேவைக்கு முக்கியமானதாக இருக்கும்.
  • பிரயாணி கூறியது அற்புதமான யோசனை. அங்கு வருபவர்கள் தொடர்பான கட்டுரைககளை இற்றை செய்யக் கூறலாம். உதாரணமாக ஒரு கிராமத்தில் இருந்து வந்தால் அவர்களுடைய பஞ்சாயத்து தலைவரின் பெயர் ஆகியவற்றை இற்றை செய்ய சொல்லலாம் அவர்கள் ஊர் தொடர்பான படங்களை இருந்தால் சேர்க்கச் சொல்லலாம்.
  • பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான நிகழ்வு ஏற்பாடு செய்ய இயன்றால் சிறப்பாக இருக்கும். விக்கிமூலம் போன்ற எளிமையான ஒன்றில் அவர்களை ஈடுபடுத்தலாம்.

Sridhar G (talk) 05:05, 11 January 2024 (UTC)Reply

கூடுதலாக ஒரு தகவல் விக்கிப்பீடியா தொடர்பான ஓவியப் போட்டி ஒன்று நடத்தலாமா? தமிழக அளவில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு நடத்தலாம். கூகுள் கட்டுரைகள் திருத்தம், துப்புரவு, 20 / 21 ஆம் ஆண்டு ஆகியவற்றை அடிப்படையாக வைத்து அவர்களை ஓவியம் வரைய சொல்லலாம். நம்மால் இணைய வழியில் இதனை நடத்த இயலும் . வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கலாம். Sridhar G (talk) 05:18, 11 January 2024 (UTC)Reply
இந்த மாநாட்டில் நாம் அரங்குதான் அமைக்கிறோம். தனியாக ஒரு ஓவியப் போட்டியை அறிவித்து நிகழ்வு நாளில் பரிசளிப்பது சரியாக இருக்காது. மாநாடு நமது கட்டுப்பாட்டிலில்லை. எனவே இணையவழியில் என்பதால் இந்த மாநாட்டினையொட்டி ஓவியப் போட்டியை நடத்துவதைவிடத் தனியாக நடத்தலாமென நினைக்கிறேன். Neechalkaran (talk) 10:15, 11 January 2024 (UTC)Reply
சரி. Sridhar G (talk) 14:00, 11 January 2024 (UTC)Reply

பங்களிப்பு[edit]

மாநாட்டு அரங்கில் ஒன்றிரண்டு நாட்கள் விக்கிப்பீடியா குறித்து பயிற்சியோ விளக்கமோ வரும் பார்வையாளருக்கு வழங்க என்னால் இயலும். மேலும் தற்பொழுது எங்களுடைய கல்லூரி அருங்காட்சியகத்தில் ஒரு சில விலங்கியல் மாதிரிகளுக்கு விக்கிப்பீடியா தொகுப்புகளின் QR இணைப்பு கொடுத்துள்ளோம். இதனை காட்சிப்படுத்த இயலும். அவ்வாறு காட்சிப்படுத்தும்போது பிற கல்லூரிகளிலிருந்து வரும் கல்வியாளர்கள் இதனை தமது கல்லூரியிலும் செயல்படுத்த முன்வரலாம். இது குறித்து ஐதராபாத்தில் நடைபெற்ற சந்திப்பில் தெரிவித்ததை நினைவுப் படுத்த விரும்புகிறேன். சத்திரத்தான் (talk) 11:14, 11 January 2024 (UTC)Reply

தமிழ் விக்கிப்பீடியர்கள் வருகைதரும் நாட்கள்[edit]

  1. பிப்ரவரி 9, பிப்ரவரி 10 - M. Selvasivagurunathan (talk) 04:31, 31 January 2024 (UTC)Reply
  2. பிப்ரவரி 9, பிப்ரவரி 10 - Sridhar G (talk) 07:53, 31 January 2024 (UTC)Reply
  3. பிப்ரவரி 9, பிப்ரவரி 10 - --சத்திரத்தான் (talk) 00:56, 4 February 2024 (UTC)Reply
  4. பிப்ரவரி 8, 9, 10 மூன்று நாட்களும் -Neechalkaran (talk) 14:48, 5 February 2024 (UTC)Reply

இற்றை[edit]

கணித்தமிழ் மாநாட்டுக் குழுவினருடன் நேரடியாக உரையாடிக் கீழ்க்கண்ட திட்டங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. விக்கிமீடியாவிற்கான காட்சி அரங்காக 18 ஆம் எண் உறுதி செய்யப்பட்டுள்ளது. வேறுவேறு பொறுப்புகளில் இருப்பதால் அரங்கப் பொறுப்பாளர்களாக என்னைத் தவிர மற்ற ஐந்து ஒருங்கிணைப்பாளர்களுக்கு அனுமதிச்சீட்டுகள் உறுதிசெய்யப்பட்டுள்ளன. மாநாட்டு நிகழ்வின் ஒரு பகுதியாக பயிற்சியரங்கில் சனிக்கிழமை மதியம் விக்கிப்பீடியா பயிற்சி அளிக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அரங்கில் வழிகாட்ட ஆர்வமுள்ள வேறு பயனர்களும் பார்வையாளர் அனுமதி பெற்று அரங்கிற்கு வரலாம். விருப்பமுள்ளவர்கள் நமது ஒருங்கிணைப்பாளர்களைத் தொடர்பு கொள்ளலாம்.-Neechalkaran (talk) 15:26, 5 February 2024 (UTC)Reply