Jump to content

Supporting Indian Language Wikipedias Program/Support/பா.ஜம்புலிங்கம்

From Meta, a Wikimedia project coordination wiki


Contact details

[edit]
Wikipedia username
பா. ஜம்புலிங்கம்
Email (optional)
drbjambulingam@gmail.com

Your contribution

[edit]

தமிழ் விக்கிபீடியாவில் 600க்கு மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளேன். கும்பகோணத்தில 2016இல் நடைபெற்ற மகாமகத்தின்போது மகாமகம் தொடர்புடைய அனைத்துக் கோயில்களின் குடமுழுக்கிலும் கலந்துகொண்டு புகைப்படங்களை எடுத்தேன். ஒவ்வொரு குடமுழுக்கின்போதும் சென்று குடமுழுக்கு தொடர்பான புகைப்படங்களையும், விவரங்களையும் விக்கிபீடியாவில் சேர்த்தேன். மகாமகம் 2016 புதிய பக்கம் உருவாக்கியதோடு, மகாமகம் என்ற பொதுத்தலைப்பில் அதிகமான செய்திகளையும், மலர்கள், நூல்கள் தொடர்பான செய்திகளையும் சேர்த்தேன். பொதுவகத்தில் அதிக எண்ணிக்கையில் புகைப்படங்களை பதிவேற்றியுள்ளேன். ஆங்கில விக்கிபீடியாவில் முக்கியமாக கருதப்படுகின்ற சில கட்டுரைகளை தமிழ் விக்கிபீடியாவில் மொழிபெயர்த்து எழுதியுள்ளேன். மாவட்டவாரியாக ஆசிரியர்கள் எழுதியுள்ள கட்டுரைகள் சிலவற்றை வடிவமைத்துள்ளேன். தமிழ்ப்பண்பாட்டின் பெருமை பேசுகின்ற தமிழக விழாக்களைப் பதிவு செய்துள்ளேன். கும்பகோணம் கோயில்கள் பற்றி வார்ப்புரு தொடங்கி கும்பகோணத்திலுள்ள 80 விழுக்காட்டுக் கோயில்களைப் பதிவு செய்துள்ளேன். அவ்வாறே தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான கோயில்கள் பட்டியல் எடுத்து அதிலுள்ள கோயில்களுக்குச் சென்று புதிய பதிவுகளை ஆரம்பித்துள்ளேன். மொழி, பண்பாடு, வரலாறு, இலக்கியம், ஆன்மிகம் தொடர்பான நூல்களைப் பற்றிய பதிவுகளைத் தொடங்கியுள்ளேன். இடிபாடான நிலையிலுள்ள பல கோயில்களின் புகைப்படங்களையும் தொடர்பான செய்திகளையும் சேகரித்து எழுதினேன். சக விக்கிபீடியர்கள் கேட்டுக்கொண்டபடி, 25 ஆண்டு காலமாக நான் மேற்கொண்டுவருகின்ற பௌத்த ஆய்வினை அடிப்படையாக வைத்து, தமிழ்நாட்டில் பௌத்தக் கோயில்கள் என்ற தலைப்பில் புதிய பக்கத்தினை ஆரம்பித்தேன். குறிப்பாக ஒரு தலைப்பில் பதிவு இல்லை என்றால் அதனைத் தேடி கண்டுபிடித்து புதிய பதிவுகளாக ஆரம்பித்தேன். அவ்வகையில் தஞ்சாவூர் பீரங்கி, திருவூடல், கல் நாதசுவரம் உள்ளிட்ட பல தலைப்புகளைத் தொடங்கினேன். முக்கியமானதாகக் கருதப்படுகின்ற பல பதிவுகளை தமிழ் விக்கிபீடியாவை அடிப்படையாகக் கொண்டு ஆங்கில விக்கிபீடியாவிலும் ஆரம்பித்து சுமார் 100 கட்டுரைகளை அதில் எழுதியுள்ளேன். விக்கிபீடியாவில் எழுதும்போது எந்தவிடுபாடும் இருக்கக்கூடாது என்ற நிலையில் எவ்வளவு விவரங்கள் சேர்க்கமுடியுமோ அந்த அளவிற்கு சேர்க்க முயற்சிக்கிறேன். ஐயமிருக்கும்போது சக விக்கிபீடியர்களின் கருத்தினைக் கேட்டுக்கொள்கிறேன். உரையாடல் பக்கத்தில் தெளிவாக என் ஐயங்களைத் தெளிவாக்கிக் கொண்டு தொடர்ந்து பதிவுகளை மேம்படுத்துகிறேன்.

நான் சிறந்ததாக நினைக்கும் சில பதிவுகள்

Support details

[edit]

அனைத்து வசதிகளையும் கொண்ட மடிக்கணினி

Support type

[edit]
  • மடிக்கணினி

Reason

[edit]

கடந்த பல ஆண்டுகளாக பயன்படுத்திவந்த கணினி அடிக்கடி பழுதாகும் நிலையிலும், வெளியூர் செல்லும்போதும் களப்பணியின்போதும் எடுக்கப்படும் புகைப்படங்களையும் தரவுகளையும் அவ்வப்போது பதிவு செய்யவும் மடிக்கணினி தேவைப்படுகிறது. பழுதாவதைச் சரிசெய்ய நேரம் கடந்துவிடும் நிலையில் சில சமயங்களில் பதிவேற்றம் செய்வது தாமதமாகிறது அல்லது தள்ளிப்போய்விடுகிறது.

Future activities

[edit]

அதிகமாக களப்பணியில் மேற்கொள்ளப்படுகின்ற, கோயில் தொடர்பான பதிவுகளை நான் செய்கிறேன். அவ்வப்போது முக்கிய நபர்களைப் பற்றிய பதிவுகளை மேற்கொள்கிறேன். களப்பணி நிலையில் ஒரே சமயத்தில் இருக்கும் இடத்தில் அதிகமான புகைப்படங்களை எடுத்துப் பதியவும், உரிய தரவுகளை சேகரிக்கவும் திட்டமிட்டுள்ளேன். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கோயில்களில் பெரும்பாலானவற்றிற்குச் சென்று புதிய கட்டுரைகளை எழுதியுள்ளேன். தொடர்ந்து அருகிலுள்ள கோயில்களுக்கும் பிற மாவட்டங்களிலுள்ள கோயில்களுக்கும் களப்பணி செல்ல உத்தேசித்துள்ளேன். அவ்வகையில் அண்மையில் கரூர், நாமக்கல் மாவட்டம் சென்று வந்து உரிய புகைப்படங்களை இணைத்துள்ளேன், இணைத்து வருகிறேன்.

Community discussion and endorsements

[edit]

Please keep the discussion friendly, and note number of endorsement may not be the only way to assess an application's merit நண்பர்களின் ஆதரவு என்னை மென்மேலும் எழுத வைக்கிறது. நண்பர்களின் ஆதரவினை நான் ஆவலோடு கோருகிறேன். உங்களின் ஆதரவினை இங்கு தெரிவிக்கவேண்டுகிறேன்.

  1. His contributions are not only to ta.wikipedia and also at Commons. Few of his images are historic landmark. One of the best Buddhism researcher around world.--Info-farmer (talk) 16:46, 20 February 2018 (UTC)[reply]
  2. Support Support --Sivakosaran (talk) 15:17, 21 February 2018 (UTC)[reply]
  3. Support Support--Selvasivagurunathan m (talk) 20:15, 22 February 2018 (UTC)[reply]
  4. Support Support--Nan (talk) 10:07, 23 February 2018 (UTC)[reply]
  5. Support Support--BALA. RTalk 12:09, 23 February 2018 (UTC)[reply]
  6. Support Support--Maathavan (talk) 12:36, 23 February 2018 (UTC)[reply]
  7. Support Support--AntanO 14:01, 26 February 2018 (UTC)[reply]


Status
open