ஐபி திருத்தம்: தனியுரிமையை மேம்படுத்தலும் தவறான பயன்பாட்டைத் தவிர்த்தலும்/கருவிகளை மேம்படுத்தல்/உரையாடல் தொடக்கம்
மறைக்கப்பட்ட ஐபி - பயன்படுத்த வேண்டிய கருவிகள்
அனைவருக்கும் வணக்கம்
இந்த செய்தி மிகவும் முக்கியமானது. தவறான நோக்கத்துடான திருத்தங்களையும், மற்ற பயனர்கள் மீதான சீண்டல்களையும் தவிர்ப்பதற்கான கருவிகளைப் பற்றியது.
2001ஆம் ஆண்டில் விக்கிப்பீடியா தொடங்கப்பட்டதை அறிவீர்கள். அன்றில் இருந்து இன்று வரை, இணையப் பயனர்களின் தனியுரிமைத் தேவைகள் மாறுபட்டு வருவதை காண்கிறோம். எடுத்துக்காட்டாக, பக்கங்களின் திருத்த வரலாற்றிலும் அண்மைய மாற்றங்கள் பக்கத்திலும் உள்நுழையாத பயனர்களின் ஐபி முகவரிகள் காட்டப்படுகின்றன. விக்கிமீடிய நிறுவனம் இந்த ஐபி முகவரிகளை மறைப்பதற்கான திட்டத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. ஐபி முகவரிகளை ஏன் மறைக்க வேண்டும்? ஐபி முகவரிகளை கொண்டு ஒருவரைப் பற்றிய தகவல்களைப் பெற்றுவிட முடியும். நம்முடைய பங்களிப்புகளில் சிக்கல் வந்துவிடக் கூடாது என்பதற்காக இம்முடிவை எடுத்துள்ளோம்.
பயனர்களின் மீதான சீண்டல்களையும், தவறான நோக்கத்துடனான திருத்தங்களையும் தவிர்ப்பதற்காக three ideas about potential tools/ta|சில யோசனைகள்""" தெரிவிக்கப்பட்டுள்ளன. இதுவரைக்கும் இதற்காக நாம் எடுத்த நடவடிக்கைகளை இனிமேல் எளிதாக்கவே இவை.
இந்த யோசனைகளை பரிசீலிக்க உங்கள் உதவி தேவை. இவற்றை செயல்படுத்துவதால் எந்த வகை சிக்கல்களை நாம் எதிர்கொள்ள நேரிடும் என நினைக்கிறீர்கள்? இவற்றால் செலவினங்கள் கூடுமா? இவற்றால் ஏற்படும் பயனகள் என்னென்ன? இவற்றில் எவை உங்களுக்கு பயன்தரக் கூடியவை, எவை பயன் தராதவை என நினைக்கிறீர்கள்?
ஐபி தகவல்
இவற்றை செயல்படுத்துவதால் எந்த வகை சிக்கல்களை நாம் எதிர்கொள்ள நேரிடும் என நினைக்கிறீர்கள்? இவற்றால் செலவினங்கள் கூடுமா? இவற்றை எவ்வாறு மேம்படுத்தலாம்? இவற்றில் எவை உங்களுக்கு பயன்தரக் கூடியவை, எவை பயன் தராதவை என நினைக்கிறீர்கள்?
பயனர் தொகுத்த போது இருந்த இடத்தை பற்றிய தகவல் ஆங்கிலத்தில் மட்டும் இருந்தால், உங்கள் மொழிச் சமூகத்திற்கு பயன் தருமா? இடங்களைப் பற்றிய விவரங்களை மொழிபெயர்த்துத் தரும் கருவிகளை பயன்படுத்துகிறீர்களா? இருப்பின், அவற்றை இங்கே குறிப்பிட முடியுமா?
தொடர்புடைய திருத்தக் கருவிகள்
இவற்றை செயல்படுத்துவதால் எந்த வகை சிக்கல்களை நாம் எதிர்கொள்ள நேரிடும் என நினைக்கிறீர்கள்? இவற்றால் செலவினங்கள் கூடுமா? இவற்றை எவ்வாறு மேம்படுத்தலாம்? இவற்றில் எவை உங்களுக்கு பயன்தரக் கூடியவை, எவை பயன் தராதவை என நினைக்கிறீர்கள்?
தொடர்ந்து தவறாக நடக்கும் பயனர்களைப் பற்றிய தகவல் சேமிப்பு
இவற்றை செயல்படுத்துவதால் எந்த வகை சிக்கல்களை நாம் எதிர்கொள்ள நேரிடும் என நினைக்கிறீர்கள்? இவற்றால் செலவினங்கள் கூடுமா? இவற்றை எவ்வாறு மேம்படுத்தலாம்? இவற்றில் எவை உங்களுக்கு பயன்தரக் கூடியவை, எவை பயன் தராதவை என நினைக்கிறீர்கள்?
நாங்கள் குறிப்பிடாத எவ்விதத்திலாவது ஐபி தகவலை பயன்படுத்துகிறீர்களா?
m:IP Editing: Privacy Enhancement and Abuse Mitigation/ta, m:IP Editing: Privacy Enhancement and Abuse Mitigation/Improving tools/ta – உங்கள் மொழிச் சமூகம் நாங்கள் குறிப்பிடாத எவ்விதத்திலாவது ஐபி தகவலை பயன்படுத்துகிறதா? எவ்வகையில்? கருவிகளை மேமடுத்துவதற்காகவும், புதிய கருவிகளுக்காகவும் பரிந்துரைகளை வழங்குவீர்களா?